Thursday, July 18, 2024

வருணா !!!

வருணா‌ வருணா வருணா
வருகிறாயே எங்கு போகினும் 
வருணிக்க வார்த்தை தேடல் என்னுள்..

சில நேரங்களில் இறையாகி
தன்னுள் இருக்கும் இறைத்தன்மையையும் காட்டுகிறாயே 

சில நேரங்களில் குழந்தையாகி
என்னுள்ளே குழந்தையாய் குடிக்கொள்கிறாய் 

பல நேரங்களில் தோழனாகி என்னை ஆசுவாசப் படுத்துகிறாய் 

மேலும் கள்வனாகி, என்னைக் கொள்ளையிட்டு,  காதலனாகிறாயே ! 

வருணா‌ வருணா வருணா
வருகிறாயே எங்கு போகினும் !!!

உன்
அழற்கதிர் வருணா !!!








1 comment: